Thursday, May 11, 2017

மெய்சிலிர்ப்பு




ஜெ,

சம்பிரதாயமானது என்றாலும் age old ஆன ஒரு விஷன் சரியான வார்த்தைகளில் வரும்போது ஒரு மெய்சிலிர்ப்பு எழுவதுண்டு. நான் அதை பலமுறை டால்ஸ்டாயில் அடைந்திருக்கிறேன்

ராமனைப்பற்றி சொல்லும்போது  ஒன்றுபற்றி அதில் நின்ற நேர்வழியன் என பீமன் சொல்வதும் கிருஷ்ணனை ஊழிச்சுழியென வளையும் நெறிகொண்டவன் என்பதும் மிக அழகிய சொல்லாட்சிகள்

கோதண்டம் அல்ல சுதர்சனம் என்பது ஒரு நல்ல வரி. கொஞ்சம் வளைந்தாலும் நிமிர்ந்தே இருப்பது ராமனின் வில்.வளைந்து வளைந்து செல்வது கிருஷ்ணனின் சக்கரம்.

என் இறைவனின் கையில் வேய்குழல் இருக்கையில் நான் எப்படி மணங்களில் இருந்து விடுபட இயலும்? என்றும் பீமன் கேட்கிறான். நேர்வழி சென்றவனிடம் இசை இல்லை. குறுக்குவழிகளில் சென்றவனிடம் இசை இருக்கிறது. இசைதான் அவன் குறுக்குவழி செல்வதை ஜஸ்டிஃபை செய்கிறது

கிருஷ்ணமூர்த்தி