ஜெ வணக்கம்..
மழைப்பாடல் படித்துக் கொண்டிருக்கிறேன். எப்படி எப்படி என்னும் கேள்வி
எனக்குள் கிளைத்துக் கொண்டே இருக்கிறது.. எத்தனை வர்ணனைகள், எத்தனை விதமாக!!
நுணுக்கங்களுக்குள் உள்ளூற புகுந்து மகிழும் அடுத்த கணம், பெரும் விஷயங்கள் கண்முன் வருகின்றன..
உங்கள் இலக்கியக் கொடை என்று தான் சொல்ல வேண்டும்.. இதை வாசிக்க வாய்ப்பு கிடைத்ததே பெரும் பேறு..
என் கண்கள் கலங்கி விட்டன இதைப் படித்து...
சக்ஷுஸ்
நகைத்து “ஆம், மணநாளிரவில் அனைத்துப்பெண்களும் அவ்வண்ணமே உணர்கிறார்கள்”
என்றாள். காந்தாரி திகைத்து நோக்க “மணநாளிரவில் துயிலாத பெண் அரிய ஒன்றை
இழந்தவள். துயில்பவள் இழப்பதற்கென அரியவை ஏதுமில்லா பேதை” என்றாள்
சக்ஷுஸ். “நான் இழந்தவற்றைவிடப் பெரியதொன்றை கண்டேன்” என்றாள் காந்தாரி.
“ஆம், அதையும் அனைத்துப்பெண்களும் காண்கிறார்கள். கண்டகணமே இழக்கிறார்கள்”
என்று சக்ஷுஸ் நகைத்தாள்.
நன்றி
பவித்ரா