Friday, May 26, 2017

அடுமனைப்புகை




இலையுதிர்த்து சோர்ந்த மரங்களும், புழுதிக்காற்றும்,  மெலிந்து பழுத்த கண்களுடனான விலங்குகளூம், வறுபட்ட மணற்பரப்பும்,அனலான கூழாங்கற்களுமாய் கோடை தகிக்கிறது துவக்கத்திலேயே.

 திரெளபதியின் காலகள்  இந்த கடும் கோடையில்  குதிகால்வளைவு நெருக்கமாக வெடித்து உலர்களிமண்ணால் ஆனதுபோலத் தெரிந்தது. விரல்களின் முனைகளும் முன்கால் முண்டுகளும் காய்த்து விளாங்காய் ஓடுபோலிருந்தன-  இதை வாசிக்கையில். மணம் முடிந்த பின்னர் தருமனை மஞ்சத்தறையில் சந்திக்க வந்த பாஞ்சாலியின் செம்பஞ்சுக்குழம்பிட்ட பாதங்களும், மேல்பாதங்களில் வரையப்பட்ட நெல்லியிலைச்சித்திரமும் நினைவில் எழுந்தது

 அடுமனைப்புகை குறித்து  இதிலும் இதற்கு முன்பும் வாசித்தது நினைவில் வருகிறது.

//உணவுப்புகை கூரைமேலெழுந்து விடுதியின் கொடி என நின்றிருந்தது.// அடுமனைப்புகையே ஒரு இடத்தை இல்லமென ஆக்குவது// 

 முன்பு சிறுவனான அர்ஜுனன் பீமனைக்கான அடுமனைக்கு செல்கையிலும் இது போலவே 

  //புகைக்கூண்டுகளில் இருந்து எழுந்த புகை ஓடைநீரிலாடும் நீர்ப்பாசி போல காற்றில் சிதறிக்கரைந்துகொண்டிருந்தது // என்று வாசித்ததை நினைத்துக்கொண்டேன்.

லோகமாதேவி