Saturday, May 6, 2017

இரண்டு யுகங்கள்



பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

நான் அறிந்தவரையில் மஹாபாரதத்தில் ஒரு மிகச் சிறிய நிகழ்ச்சியாக - பீமன் செல்லும் பாதையை  தன் வாலை வைத்து மறிக்கும் கிழட்டு குரங்காக அறிமுகமாகும் அனுமன்,அந்த வாலை அகற்ற முடியாமல் திணறும் பீமனுக்கு தான் யார் என்பதை உணர்த்தி அவன் அகந்தையை களைவார்- வருவதை 'பாகுபலி' போன்று மிகப் பிரமாண்டமாக தங்கள் கற்பனைத்தளத்தில் 'முண்டன்' என்ற கதாபாத்திரமாக இந்த 'மாமலரில்' அற்புதமாக உலவச் செய்துள்ளீர்கள்! .அதுவும் இந்த அத்தியாயத்தில் இரண்டு யுகங்களின் (கிரேத -துவாபர)சந்திப்பாக இவர்களை நிலை நிறுத்தியுள்ளீர்கள்!.அதுவும் அனுமன்(முண்டன்)  - பீமனின் இந்த உரையாடலை  மிகவும் ரசித்தேன்..
இப்போது உன் உதடுகள் சொன்னது என் தலைவனின் பெயரை” என்றான். “ஆம், அப்பெயரை நீங்கள் அவ்வண்ணமே கேட்கமுடியும்” என்றான் பீமன். “மூத்தவரே, ஒன்றுபற்றி அதில் நின்ற நேர்வழியனின் அடியவர் நீங்கள். நீங்கள் புலன்வென்று அமையமுடியும். நானோ ஊழிச்சுழியென வளையும் நெறிகொண்டவனின் கைக்கருவி. கோதண்டம் அல்ல சுதர்சனம். என் இறைவனின் கையில் வேய்குழல் இருக்கையில் நான் எப்படி மணங்களில் இருந்து விடுபட இயலும்?”
முண்டன் தத்தளிப்புடன் தலையை அசைத்தான். “நான் உங்கள் இளையோன் அல்லவா? நீங்கள் முழுமெய் என அறிந்ததும் பேரன்பைத்தானே?” என்றான் பீமன். முண்டன் கண்கள் கனிய நோக்கி “ஆம், அதனாலேயே நான் இப்புவி விட்டு விலகமுடியாதவனானேன்” என்றான். “மூத்தவரே, அன்பில் கனிந்திருக்கையில் இப்புவியைவிட இனியது பிறிதேது?” என்றான் பீமன். முண்டன் மெல்ல நகைத்து “உண்மை, கனிகளும் தளிர்களும் இனிக்கும் ஒரு காட்டில் வாழும் குரங்கு நான்” என்றான்
அன்புடன்,
அ .சேஷகிரி