அன்புள்ள ஜெமோ
யயாதி கதையில் நான் முற்றிலும் எதிர்பாராத இடம் என்பது புருவின் இளமையை வாங்கிக்கொண்டு
வந்து நின்றிருக்கும் யாயதியின் தோற்றத்தைக் கண்டு சர்மிஷ்டை அடையும் அருவருப்பு. அந்த
உணர்வை அதிகம் சொல்லாமலேயே கடந்துசென்று விட்டீர்கள். அவள் என்ன உணர்ந்தாள் என்பதை
ஊகிக்க முடிகிறது. மூலத்தில் இந்த விஷயமே இல்லை என நினைக்கிறேன். சொல்லப்போனால் இது
ஒரு நவீனகாலவாசிப்பு. ஆனால் உளவியல்சார்ந்த அணுகுமுறையுடன் கூர்மையாக இருந்தது
எஸ்.ஜெயராமன்