Sunday, May 7, 2017

மகன்



ஜெ

மாமலரில் மணம் தேடிச்செல்கிறான் பீமன். அவன் நாற்றத்தை சென்றடைவது ஒரு கிளாஸிக் டிவிஸ்ட் என்று தோன்றியது. ஆனால் நாற்றமும் மணமும் ஒன்றே என்று உணர்வதுதான் சரியான கிளாஸிக் முடிவு. நாற்றத்தை மணமாகவும் உணர்கிறான். அந்தரங்கமாக அது நாற்றமா மணமா என்பது முக்கியமே இல்லை

அதோடு அழகான இடம் அவன் பாஞ்சாலியிடம் சமைத்து வாங்கிச்சாப்பிடும்போது அவளுக்காக எடுத்து வைத்ததையும் வாங்கிச் சாப்பிடுவது. நீ சாப்பிடு என்று சொன்னால் அது பீமனே இல்லையே. அப்படி அவன் சாப்பிடுவதைத்தான் அவள் விரும்புகிறாள். அவ்வலவு பெரிய வீரன் ஒரு மகன் போல ஆகிவிடும் இடம் இல்லையா அது?

சாரங்கன்