Sunday, May 14, 2017

தாழ்வுணர்ச்சி





அன்புள்ள ஜெ,

நாள்தோறும் வாசிக்கையில் தெரியவில்லை. ஆனால் ஆரம்பம் முதலே யயாதி தன் வயதைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கிறான். அதைப்பற்றியதாழ்வுணர்ச்சி அவனுக்கு இருக்கிறது. அவன் சர்மிஷ்டையில் ஈடுபாடுகொண்டதற்குக் காரணம் அவள் அவன் வயதை காட்டவில்லை என்பதனால்தான். முதல்ராத்திரியிலேயே அவன் அவளிட்ம் கேட்பதும் அதைப்பற்றித்த்தான். அவள் அழகில்லை என்பதனால்தான் அவளிடம் அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறான்

அப்படியென்றால் ஏன் சுக்ரர் அவனை வயதாகும் சாபம் கொடுத்தார்? ஏனென்றால் அவர் மனசு அவருக்குத்தெரிந்தது. வயசாகி அறியும்படி அவர் வரம்தான் கொடுத்திருக்கிறார். அந்த நுட்பம்த்தான் மாமலரில் யயாதி கதையை அழகாக ஆக்குகிறது என நினைக்கிறேன்

சரவணன்