Thursday, May 4, 2017

நிறைவும் துக்கமும்






அன்புள்ள ஜெ

மாமலரில் யயாதியின் கதை மெல்ல அடங்கி முடிந்ததை வாசித்தபோது ஒரு நிறைவும் துக்கமும் ஏற்பட்டது. ஆரம்பத்திலிருந்தே வாசித்தால் இது காமத்தின் துக்கத்தைச் சொல்லும் ஒரு பெருநாவல் என்று தோன்றியது. ஒன்றிலிருந்து ஒன்றென தலைமுறைகளுக்கு துக்கம் கைமாற்றம் செய்யப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரே துக்கம் அடுத்தடுத்து சென்றுகொண்டே இருக்கிறது. மனைவியைப்பறிகொடுத்த சுக்கிரரின் துக்கம். அந்த துக்கத்திலிருந்துதான் காதலனால் கைவிடப்பட்ட தேவயானியின் துக்கம் வருகிறது. இப்படி எல்லா கதைகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இந்த வலைப்பின்னலை இப்போது நாவல்முடியப்போகும் தருணத்தில் உணரமுடிகிறது. சமீபத்தில் இந்த அளவுக்குக் கனவில் ஆழ்த்தி சோர்வும் துக்கமும் பரவசமும் கொள்ளச்செய்த நாவல் வேறில்லை

மகாதேவன்