ஜெ,
மாமலர்
மணங்களின் வழியாக வே சென்ற நாவல். இப்போது வாசிப்பை நினைத்துப்பார்க்கையில்
அந்த யூனிட்டி ஆச்சரியமூட்டுகிறது. மணம் காற்று இரண்டுதான் நாவல். மாருதர்கள் கதாநாயகர்கள்.
காற்று வருவதுபோலத்தான் குரங்குகள் வருகிறார்கள். ‘மணம் என்ற ஒன்று இங்கே ஏதோ காரணத்தால்
இருந்துகொண்டிருக்கிறது. நாம் நம் அர்த்தங்களை அதன்மேல் ஏற்றிபுரிந்துகொள்கிறோம். நம்மால்
அதை அறியவே முடியாது’ என்ற வரிதான் நாவலுக்கே க்ளூ என நினைக்கிறேன்
மாதவன்