Tuesday, May 16, 2017

அனுமனின் கதை




ஜெ

மாமலரில் அனுமன் வந்து நிறைவடைந்ததும் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் கடோத்கஜனுக்கு பீமன் அனுமனின் கதையைச் சொன்னது ஞாபகம் வந்தது.

அந்தக்கதையில் அனுமன் ஞானத்தின் சூரியக்கனியை தேடிச்செல்கிறான். இங்கே பீமன் காதலின் மாமலரை தேடிச்செல்கிறான். எவ்வளவு வித்தியாசம். சூரியனைத்தேடிச்செல்லும்படித்தான் அனுமன் பீமனிடம் சொல்கிறன். அது உன்னால் முடியும் என்னால் முடியாது என்கிறான் பீமன்

ஆனால் கடோத்கஜன் தன்னை அனுமனாகவே உணர்கிறான்


என பிரயாகையில் வருகிறது. அந்த இடத்தை வாசித்து விட்டு மெய்மறந்து முகம் மலர்ந்து நீண்டநேரம் இருந்தேன்

ராம்சந்தர்