ஜெ
அஸ்ருபிந்துமதியின்
கதை இன்னொரு வடிவத்திலே வெண்முரசில் வந்திருக்கிறது. அது மகாபாரதக்கதை அல்ல. அதை பிற்கால
புராணமாகிய தேவிபாகவதத்திலே காண்கிறோம். பொருத்தமில்லாமலிருக்கும். அந்தக்கதையை இங்கே
நுட்பமாகக்கொண்டுவந்து இணைத்துவிட்டீர்கள். அஸ்ருபிந்துமதி தேவயானிக்கும் சர்மிஷ்டைக்குமான
இணைப்பு என்பது ஒரு கூர்மையான கவனிப்பு. அவள் அவனுக்குள் இருந்துதான் எழுந்துவருகிறாள்.
விழிநீர்மகள் என அவளை மொழியாக்கம் செய்திருந்ததும் சிறப்பு
சுவாமி