மாமலர் மெய்க்காதலை நோக்கிய பயணம் என்று நான் நினைத்திருந்தேன்.
நீங்களும் அதைச் சொன்னதாகவே ஞாபகம். ஆனால் இரு உயிர்களுக்கு நடுவே ஏன் அன்பு உருவாகிறது
என்ற கேள்விக்குப்பதிலாக அது செல்கிறது. தேவைகள் சார்புநிலைகள் ஆகியவற்றால் அன்பு உருவாகிறது
என்பது ஒருவிஷயம். ஆனால் கடைசியில் அன்பு உயிர்களுக்கிடையேயான ஒரு தேவையாகவே உருவாகிறது
என்பதை நாவல் சென்று தொட்டதுபோல தோன்றுகிறது. அதை மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது.
சொந்த அர்த்தங்களை அதன்மேல் ஏற்றிவைக்கத்தான் முடியும்
ஜெகன்