Monday, May 8, 2017

மாமலரின் பிளான்






அன்புள்ள ஜெ

மாமலரின் பிளான் என்னை வியக்க வைத்தது. கடைசியில் அனுமன் வந்தபோதுதான் ஆகா நாவலே குரங்குகளில் இருந்தல்லவா தொடங்குகிறது என்ற எண்ணம் வந்தது. அந்த மலரை கொண்டுவருவது காற்றுதான். காற்றின் மக்களான குரங்குகள் அவர்களில் ஒருவராகவே அனுமன் முண்டனாக நாவலுக்குள் அறிமுகமாகிறார். நாவல் முழுக்க அவர் பேசுவதை அனுமனின் குரலாக எடுத்துக்கொண்டால் வரும் அர்த்தமே தனி. இந்தவகையான விரிவான ஒரு பிளானை நீங்கள் நாவல் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே போட்டுவிடுவீர்கள் என நினைக்கிறேன். ஆனால் வாசகர்கள் நாவல் முடிந்தபின்னாடிதான் அந்த வடிவத்தை மனதுக்குள் தொகுத்துக்கொள்ளமுடிகிறது.

நாவல் முழுக்க குரங்குகளின் அழகு வந்துகொண்டெ இருக்கிறது. குரங்கு வடிவமான பீமன் எப்படி புலியைச்சுழற்றி வீசுகிறார் என்பதில் ஆரம்பிக்கிறது. அது தேவயானியின் புலிதான் என வாசிக்க மேலும் எழுநூறுபக்கம் ஆகிறது. இந்த கிராண்ட் பிளானுடன் தொடராக ஒரு நாவலை எழுதுவது அபாரமான விஷயம்தான்

செல்வக்குமார்