Wednesday, May 24, 2017

நீர்க்கோலத்திற்கு காத்திருக்கும் தருணத்தில்..

அன்புள்ள ஜெ, 


முன்பே எழுதி வைத்து இருந்தேன்.. அனுப்ப மறந்து விட்டேன் போலும்..

மாமலர் பற்றி எழுத வேண்டும் என நினைத்து.. தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது 

அற்புதமான தலைப்பு. மலர்களுக்கு, இயல்பாகவே, மனச்சித்திரத்தில் ஒரு அர்ப்பணிப்பு சார்ந்த பிம்பம் அளிக்கிறது. அதுவும் தானாக விழுந்த மலர்கள்.

எங்கிருந்து ஆரம்பிப்பது? - பீமன் மாமலரைத் தேடுவது, அதன் வாசம் தேடி.. வாசம் என்பது மூதாதையரின் வாசம். விதையும், அதன் மூலமும் அதன் சூழலும் என.. 

பீமன் - மலர்மிசை  ஏகினான் - மலரின் வாசம் தேடி அலைந்தான், மாணடி சேர்ந்தான் - மாட்சிமை பெற்ற அனுமனடி  அடைந்தான் - நிலமிசை நீடுவாழ்வான்.

அதன் நீட்சி - வையத்து வாழ்வாங்கு.. - வானுறையும் தெய்வமாக -- என இணையும் மற்றோரு குறள் 

நிகழ்காலத்திற்க்கு கடந்த கால புரிதல் வேண்டும். விதைகளின் விதையாக அறியவேண்டும். நம்மைத் தூண்டும் அணுவிசை எது என. அதன் மூலம் காலம் கடந்து - நீட்சியாக  வாழ்தல் அருகமையும்..?

இந்துமதியின் உறுதியில் ஆரம்பித்து.. ஆயுசின் சோகத்தில் ஒரு மலர் - அவன் பெறும் குழந்தை.. 

அசோகசுந்தரி  - துன்பமற்றவள் அற்புத படைப்பு. கணத்தின் உண்மையில் வாழ்பவள். அவளது  காலத்துடிப்பு மலரில். கால வினாடிகள் தொடங்காதவரை இளமை.. ஹூண்டனிடம் மலரவில்லை - நகுஷனிடம் மலர்ந்தது. அவள் காலம் முன்னகர ஆரம்பித்து விட்டது . காமமில்லாத காதல் - சாத்தியமா? ஆம் அசோக சுந்தரிக்கு  சாத்தியமே . ஆயினும், நகுஷனின் காமத்தில் எரியில் காய்ந்து  ஆழ்மனதில் செய்தி அனுப்புகிறாள் - தன் முதல் காதலன் ஹூண்டனுக்கு. எத்தனை உளவியல் மடிப்புகள் 

அசோக சுந்தரி - திரௌபதி, ஹூண்டன் - கர்ணன்,  நகுஷன் - அர்ஜுனன் 

ஹூண்டன் - நகுஷன் யுத்தம் - மற்றோரு செவ்வியல் நாடக தருணம் 

கிராதத்திலும், மாமலரிலும், எதிர்கால நிகழ்வுகளும் (ஒரு வித நனவிலி காட்சிகள் அமைப்பு) தெரிவிக்கப் பட்டலாலும் தேர்வுகள் குவிவது வேறொரு மையத்தில்.

தேவயானி - கசன் - சுக்ரர்.. மற்றோரு கூரிய அமைப்பு. இறப்பு, இறப்பின் மீட்சி அதிலுள்ள சிக்கல்கள்.. மூலக்கதையே இந்த விஷயத்தை தொட்டிருந்தாலும், நீங்கள் மீட்டிய இசையே வேறு. மரணத்திலிருந்து மீட்பே இயற்கையாக அமையலாம். அணுவிசையிலிருந்து அதனை செய்யும் போது , அந்த உயிரே சூழல்களை தைத்து போட்ட ஒரு நைந்த  துணியாகி விடுகிறது.முதலில் கசனுக்கு ஓநாயின் இயல்பு, பின் வேங்கைகளின் இயல்பு, அதன் பின் சுக்ரரின்.. சுயத்தின் பிரயாணம் அறுபட்ட துண்டுகளாக.. எப்படி அவனால் தேவயானியை முழுதுற காதலிக்க முடியும்? தேவயானிக்கும் அவள் காதலிப்பதில் ஒரு அடையாளக் குழப்பம். கசனையா? ஓநாய்கலந்த கசனையா ? ஓநாயும் வேங்கைகளும் கலந்த கசனயா? சுக்ரர் வரும்போது மேலும் குழப்பம் அடைகிறது . அந்த மரண மீட்பு நுண் சொல் வரமா? சாபமா? சொல்லாடல்கள் ஏதுமில்லாது தேவயானியே கசன் காதலன் இல்லை என்ற முடிவிற்கு வந்து விடுவாள் என நினைத்தேன் 

சாயை மற்றோரு உளவியல் நுணுக்கம் ஆய்ந்த படைப்பு. திரௌபதிக்கு மாயையோ

விருஷபர்வன் சுக்ரரின் விண்ணப்பத்திற்கு இணைவது - தோல்வியில் நிமிர்வது மீண்டும் மீண்டும் எழும் ஒரு அற்புத குறியீடு.

யயாதியின் அணுக்கத்தோழன் - பார்க்கவன் - அதுவும் சுக்ரரின் பெயர்?

தந்தையை பெறுதலின் மிக சிக்கலான குறியீடு யயாதி - புரு.

அன்புடன் முரளி 
https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif