அன்புள்ள ஜெ.
இல்வாழ்க்கை வாழ்தலும், இல்வாழ்க்கை
துறத்தலும் கூடி விவாதிக்கும் தருணம் - ஒரு புதிய கோணம் என்று தோன்றுகிறது.
'துறந்தார்க்கும், துவ்வாதார்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான்
துணை' குறள் - அற்புதமாக பொருந்துகிறது.
முன்னே
பீமன் அனுமனை சந்திப்பான் என்று தோன்றினாலும், கூடவே வந்து வழிகாட்டும்
தெய்வமாக, சோதிக்கும் கருணாளனாக, தோள்தழுவும் நண்பனாக இருப்பதாக தோன்றும்
முண்டன் ஒரு வித ஆச்சரியத்தை தூண்டும் உணர்வு. வெகு நாட்களுக்கு முன்
சென்னையில் - கறுத்த தெய்வத்தை தேடி - நாடகம் நிகழ்ந்தது, அதை பார்ப்பது
போன்ற உணர்வு. சரியான ஒப்பீடா எனது தெரியவில்லை
யுக
தருமங்கள், யுக புருஷர்கள், அவர்கள் உலகை இணைக்கும் செறிவு, ராமா
நாமத்தின் இனிமையை சுவைக்க வழிகாட்டும் முண்டன்.. இனிய துகள்களின் சூழலில்
மிதந்து கொண்டே ..
இன்றைய வெண்முரசின் வாசிப்பிற்கு பின் மனதில் ஒரு விசேஷ குதூகலம்.
அனுமன் ஸீதையை தெய்வமாக வணங்குவது சாக்தத்தின் முதிய கூறோ? எனக்கு அதிகம் தெரியாது, ஒரு எளிய கேள்விதான்
முரளி