அன்புள்ள ஜெமோ
மொத்த கதையும்
அனுமனால் சொல்லப்படுகிறது என்பதை வாசித்ததும் நாவலே திரும்பிவிட்டது. கட்டைப்பிரம்மசாரி
காதலின் கதையைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆச்சரியமான முரண்பாடுதான் இது. அனுமனும்
பீமனும் காற்றின் மைந்தர்கள் என்பது தெரியும். காற்றுதான் மூக்குடன் தொடர்புள்ளது.
மணம் காற்றின் ஓர் இயல்பு. இருவரும் மணத்தைத்தேடிச்செல்கிறார்கள் என்பதே கவித்துவமாக
இருக்கிறது. அனுமன் தம்பிக்கு அவன் மூதாதையரின் கதையைச் சொல்கிறான் என்பது அழகான ஒரு
கற்பனைதான்\
அதோடு முண்டன்
காலத்தை புரட்டிக்கொண்டே இருக்கிறான். அதெப்படிச்
செய்யமுடியும் என்ற கேள்விக்கு அவன் அனுமன், சிரஞ்சீவி , காலத்தைக் கடந்தவன் என்பதுதான்
அர்த்தபூர்வமான பதில்
சாரங்கன்