Monday, February 9, 2015

உருமாற்றம்

[இந்திரன். பெரிதாக்க படம் மீது சொடுக்கவும்]


ஜெ

,

வெண்முரசு  http://www.jeyamohan.in/70282 ல் நடப்பது நுட்பமான ஒரு விஷயம். தருமன் ஏன் ஓடுகிறான் என்றால் அவன் தன்னை பாண்டுவாக நினைத்துக்கொண்டிருகிறான். அதாவது ஆண்மையற்றவனாக. தன்னால் முடியுமா என்ற பயம். மிருஷை வந்து அவனை ஆண்மையின் உச்சமான இந்திரனாக மாற்றிக்கொடுக்கிறார். நான் எனக்குள் அர்ஜுனன் இருப்பதை இதுவரை உனரவில்லை என்று தர்மன் சொல்வது அதைத்தான். இந்த மாற்றத்தின் தத்தளிப்புத்தான் அத்தியாயம் முழுக்க நடக்கிறது.

ஆனால் இதை அர்ஜுனன் முன்னாடியே அறிந்திருந்தான். ஆகவேதான் அவன் நீங்கல் சத்தியம் பண்ண முடியுமா என்று கேட்டான் என்று தோன்றுகிறது. இந்த உருமாற்றம் ஆழமானது. தருமன் ஒருவகையில் முழுக்கவே மாறி விடுவான் என்ற எண்ணம் வருகிறது. அதுக்காகத்தான் இத்தனை நீளமாக முழு அத்தியயமும் இதைச் சொல்லியிருக்கிறீர்கள்

சிவம்