Monday, February 16, 2015

மந்திரம்



ஜெ 

நலம் .அங்கும் நலம் என அறிகிறேன் .மொத்தம் மூன்று விஷயங்கள் குறித்து உங்களிடம் பேச வேண்டும் .

1.சனிகிழமை ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள கோவை பாரதியார் பல்கலைக்கு சென்று இருந்தேன் .அங்கு பேராசிரியர் பழனிவேல் என்பவரது உரையை கேட்டேன் .சமீப காலத்தில் என்னை கவர்ந்த உரைகளில் ஓன்று.பாசாங்குகள் இல்லாத உரை .அவரிடம் பேசி கொண்டு இருந்தபோது செவ்வியல் குறித்த அவரது  கருத்துக்கள் உங்கள் கருத்துக்களை ஒத்து இருந்தன .நான் நாகர்கோவில் என்று கூறியதும் அவர் சு ரா பெயரையும் உங்கள் பெயரையும் அனிச்சையாக உச்சரித்தார் .சங்க சித்திரங்களை சிலாகித்தார் .உங்களது அனைத்து படைப்புகளையும் படிக்கும் முயற்சியில் இருப்பதாக கூறினார் .ஒத்த எண்ணம் உடைய நபர்களை கொண்ட ஒரு சிந்தனை மரபு உருவாகி வருவதில் மிக்க மகிழ்ச்சி .இலக்கியம் வாசிக்கும் பேராசிரியர்கள் ஒரு அருகி வரும் வர்க்கம் அல்லவா ?


2.பித்தனின் பத்து நாட்கள் வாசித்தேன் .நீங்கள் கூறும் பீஜாக்ஷரங்கள் அபாயகரமானவை அல்ல .ஓன்று லக்ஷ்மி பீஜம் .மற்றொன்று ஆஞ்சநேயருடையது,ஆகாச பீஜம் என்று அழைக்க படுவது .அவற்றை நீங்கள் உச்சரித்ததால் தீங்கு ஒன்றும் இல்லை .அந்த உச்சாடனம் கூட ஒரு வகை auto immune disorder தான் .சிறு வயதில் உங்களுக்கும் ,அஜிதனுக்கும் உடலில் வந்த பிரச்னையை நினைவு கூறுங்கள் .இம்முறை மனதில் !!!மந்திர அரிசுவடிகளை அறிந்த உங்கள் மனம் அல்லது புத்தி எதோ ஒரு ஆக்கிரமிர்பிற்கு எதிராக தீவிரமாக செயல் பட்டிருக்கிறது .தீயை நீரை கொண்டு அணைக்க முயல்வதை போல .இந்த போராட்டம் அல்லது அது காரணமான ஒவ்வாமையை நீங்கள் பிரச்சினையாக கண்டு  வேறு ஒரு தீர்வை நாடி சென்று இருக்கிறீர்கள் .தீயை தீ கொண்டு அணைப்பதை போல.(உஷ்ணே  உஷணேதி  சாந்தி ?)அனால் சில எளிமையான வழி முறைகள் இதனை சரி செய்ய உண்டு.

எனக்கு காந்தியின் நோயை குறித்த மணல் சிகிட்சையை குறித்த (?)உங்கள் சிறுகதை ஓன்று நினைவிற்கு வருகிறது.எது எப்படியோ மனநல மருத்துவர்களை நாடாத வரை சரி தான் .இல்லாவிடில் கோபி கிருஷ்ணன் கதை தான் .நான் சதி கோட்பாடுகளை உருவாக்க விரும்பவில்லை .அனால் இந்த பிரச்சனைகளை குறித்து எண்ணும் போது  "நான் கவனமாக இருப்பதால் பெண்கள் விஷயத்தில் சிக்கி கொள்ளவில்லை "என எழுதியது போல் பலரிடமும் பேசவும் செய்தீர்களா ? அதன் விளைவு தான் இந்த மன உளைச்சலா ? என்ற கேள்வியும் வருகிறது.இதனை வாசித்து சிரித்தா லும் மகிழ்ச்சி .எரிச்சல் வந்தால் இவனுக்கு "கண்டதெல்லாம் மஞ்சள்" என எண்ணி மறந்து விடுங்கள் .


3.ஆ கா அவர்கள் இனி அத்தகைய சுவடிகளை பெற நேர்ந்தால் அதனை எதாவது ஒரு சாத்வீக தேவதைக்கு அர்ப்பித்த வஸ்திறத்தால் வேஷ்டிதம் அதாவது சுற்றி கட்டி வைத்து விட சொல்லுங்கள் .பின்னர் பிரச்சனைகள் இருக்காது .இது எனது குரு மரபில் உள்ள வழி முறை .மந்திர க்ரந்தங்கள் ஒன்றும் செய்வதில்லை .ஆனாலும் அதன் இருப்பு நம்மை பயமுறுத்துகிறது .சாதுவான யானையோடு ஆயினும்  ஒரே  அறையில் இருந்தால் நமக்கு பயம் வருமே .

உங்கள் நேரத்தை எடுத்து கொண்டதற்கு மனிக்கவும் 
நன்றி 

தொடர்ந்து உரையாட விரும்பும் 
அனீஷ் க்ருஷ்ணன்