Friday, February 20, 2015

உருவகக்கதைகள்



ஜெ

வெண்முரசில் வரும் உபகதைகள் பலவற்றை வாசிக்கும்போது இப்படி ஒரு ஆழமான விஷயம் இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்ததா என்ன என்ற எண்ணம் எனக்கு வந்துகொண்டிருந்தது. நான் பலரிடம் இதைப்பற்றிக்கேட்டேன். அவர்கள் அப்படி எதையும் வாசித்ததில்லை

அதன்பின்னர் சிலகதைகளை பழைய மகாபாரதத்திலேயே போய் வாசித்தேன். இந்திரதுய்ம்னன் மண்ணுக்கு வந்து தன்னை அறிய மார்க்கண்டேயரிடமும் ஆந்தையிடமும் கொக்கிடமும் ஆமையிடமும் கேட்கும் கதை சுருக்கமாக மகாபாரதத்திலே இருக்கிறது. ஆனால் நீங்கள் அதற்குக்க்கொடுத்திருக்கும் extension and interpretation  தான் அதை இந்த அளவுக்கு ஆழமாகக் கொண்டுபோகிறது என்று புரிந்துகொண்டேன். பல இடங்களை திரும்பத்திரும்ப வாசித்தேன். அதாவது ஆந்தை பார்ப்பது கொக்கு தன்னைபார்ப்பது ஆமை தன் ஆன்மாவிலேயே அடங்கிவிடுவது.

ஆனால் இந்த அளவுக்கு விளக்கத்துக்கு இடமளிக்கும்படி அந்த மூலக்கதை செறிவாகவும் உருவக ரீதியாகவும் இருப்பதே பெரியவிஷயம் என்ற எண்ணம் அதன் பின்னர் வந்தது. அதிலுள்ள நுட்பமான அழகுகளை பலமுறை வாசித்தேன்.

முருகானந்தம்