எனக்கு மஹாபாரதத்தில் கணிகன் எனும் பாத்திரம் உள்ளதா என்று எனக்கு உறுதியாக தெரியாது.
'கணிகா'
என்றால் சொட்டு, ஒரு சொட்டு என்பதாக பொருள் என்று எனக்கு தெரிந்த கொஞ்சம்
ஹிந்தி/ சந்ஸ்கிருதத்தில் இருந்து புரிந்து கொன்டது, தவறாகவும்
இருக்கலாம்.
உதாரனம்
பஜகோவிந்ததில் வரும் 'பகவத்கீதா கிஞ்சித கீதா, கங்கா ஜலலவ கணிகா பீதா' என்ற
இடத்தில் கங்கையின் ஒரு சொட்டை பருகினாலும் என்று பொருள் படுவதாக சொல்லி
செல்கிறது பஜகோவிந்தம்.
இங்கு கணிகன் அப்படியான பொருளில் பெயர் கொன்டதாக எடுத்துக்கொன்டேன்.
சொட்டு விஷம் ஆனாலும் பாலில் கலந்தால் அடையாளம் காண இயலாது, பருகவும் உதவாது.கணிகன் மறைவில் அமர்ந்து திருதராஷ்டிரன் காது பட பேசுவதையும் இதே பொறுளாக கொண்டேன்.
அவன் ஒவ்வொருவர் உள்ளும் உறையும் ஒரு சொட்டு, அவனை வீரியம் மிக விட்டுவிட்டால் சேர்ந்து நாமும் கெடுவோம்.ஜாக்ரதையாக உஷாராக இருந்து நமக்கும் உனர்துபவர் பீஷ்மர். யானை என இருந்தாலும் வாழைபழத்தினுள் ஊசி போல வந்த கணிகனை விட்டு விட்டவர் திருதராஷ்டிரன் -
அவர் உனரும் தருனம் பான்டவர் இல்லை, ஆகையினாலே துயரில் உழலுகிறான்.
எனக்கு இப்படியான பொருளில் - கணிகன், சொட்டு பொல இருந்து உள் இருந்தே தூன்டி செல்லும் தூய விஷம்.செல்லுபடி ஆகும் இடத்தில் வீரியம் கொள்பவன்.
நன்றி
வெ. ராகவ்
கணிகர் என்றார் [gaNikar] கணிப்பவன் என்று பொருள்
மகாபாரதத்தின் கதாபாத்திரம். ஆனால் மிகச்சிறிய கதாபாத்திரம். கணிக நீதி என சுருக்கமான ஒரு வடிவம் அதில் உள்ளது
ஜெ
குழும விவாதத்தில்...