ஜெ
தருமனின் முதலிரவுக்காட்சி அற்புதமானது. அவர்கள் இருவருக்குமே ஒரு சங்கடம். அவன் மிகவும் குழம்பியிருக்கிறான். தர்ம்சங்கடம். ஓடிவிட நினைக்கிறான். தப்பு என்று நினைக்கிறான். அவளுக்கு அவனைப்புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது
ஆகவே கதைகள் சொல்லிக்கொள்கிறார்கள். மாறிமாறி கதைகள் சொல்லிச்சொல்லி மனங்களைப்புரிந்துகொள்கிறார்கள். அந்தக்கதைகளின் உள்ளர்த்தங்களை யோசிக்கும்போது இருவருடைய மனம் செயல்படும் முறை என்ன என்பது மிகத்தெளிவாக தெரியவருகிறது
ஒவ்வொரு கதையிலும் ஒரு ரகசியம். கதை என்பதை விட புதிர் என்பதே பொருத்த, இடா தேவர்களை தேர்ந்தெடுக்கக் காரணம் அவர்கள் அவளை கற்பனையில் இன்னமும் அழகியாகக் கண்டார்கள் என்பது பாஞ்சாலியின் சைக்காலஜியை தெளிவாகக்க்காட்டுகிறது
கதைகளை ஒரு பக்டை மாதிரி ஆடிக்கொள்கிறார்கள். அதற்குப்பின் அவன் சொல்லாத கதையை அவள் ஊகித்துக்கொள்வதுதான் உச்சம். சட்டென்று அங்கே தாவிச்சென்றுவிடுகிறாள்.
வேணுகோபால்