Tuesday, February 10, 2015

வரிகள்




இன்று கன்னியாக அவளிருக்கையில் ஒருவேளை நீங்கள் காமத்தை வெல்லக்கூடும். நாளை அவள் இளம் அன்னையாக இருக்கையில் அவள்மேலெழும் பெருங்காமத்தை ஒருகணமும் வெல்லமுடியாது. பெண்கள் பெருங்காமத்தையூட்டும் பருவம் அதுவே. அப்போது காய் கனிந்திருக்கிறது. கன்னித்தெய்வம் தன்னை அன்னையெனக் காட்டும் மாயம் சூடியிருக்கிறது. அது ஆண் நெஞ்சில் வாழும் குழவியை தொட்டெழுப்புகிறது. மதநீரை விட நறுமணம் மிக்கது பால்மணம். 

வெண்முகில்நகரத்தில் இந்த வரிகளை வாசித்து முதலில் என்ன என்று புரியாமல் திகைத்துப்போனேன். மறுபடியும் வாசித்தேன். ஆமாம் என்று தோன்றியது. நமெல்லாரும் அறிந்த உண்மை. ஆனால் போகிறபோக்கில் வந்து விழுந்திருக்கிறது. சட்டென்று என்னென்னவோ எண்ணங்களை கொடுத்தது. தரிசனம் போல இருந்தது

ன்னையில் கனிந்திருப்பதே கன்னியில் பொலிந்திருக்கிறது.  இதைவிடக் கசிதமாக அதைச் சொல்லமுடியுமா என்றே பிரமிப்பாக இருந்தது


ஜெ சார், வெண்முரசின் சிறப்பு என்பதே இப்படி அவ்வப்போது சம்பந்தமே இல்லாமல் திறந்துகொள்ளும் பல நுட்பமான இடங்கள்தான்

பசவராஜு