அன்புள்ள ஜெமோ சார்
பாஞ்சாலி தருமன் உறவின் காட்சியை அற்புதமான சினிமா போல காட்டியிருக்கிறீர்கள். தெப்பத்தில் வருவதுபோல அவள் வருகிறாள் என்பதில் தொடங்கி. அதர்குமுன் அவள் வரும்படகு செடிகளில் மறைந்து மறைந்து தெரிகிறது. அவளுடைய காலைத்தான் முதலிலே பார்க்கிறான் [பாதாதிகேசம்] கேசத்தைப்பார்ப்பது கடைசியிலேதான்
அவளை எதிர்கொள்ளவே தயங்குகிறான். என்ன வாசித்தீர்கள் என்று கேட்டதுமே அவளிடம் நீ சொல்லு என்கிறான். அவளை ஆழம்பார்க்க நினைக்கிறான் வித்யாதரரின் கதைகள் மிக எளியவை என்ற வரிமிகவும் நுட்பமானது. எளிமையான கதைகள். இவர்கள் அதற்குக்கொடுக்கும் அர்த்தங்கள் தான் வேறு. அவள் எல்லா பறவையும் ஒன்றே என்ற கதையைச் சொல்ல இவன் வேறு ஒருகதையைச் சொல்கிறான். இடாவின் கதை. மூன்று நெருப்பையும் [காமம் குரோதம் மோகம் இல்லையா?] ஒன்றாகவே நிறுத்திய தேவமகளின் கதை.
அவளின் அகங்காரம்தான் அதற்குக்காரணம் என்கிறாள் அவள் சிரித்தபடி.அத்தனை மணங்களுக்கு அடியில் அவள் மணம். அது எரிமணம். குங்கிலியம் அல்லது அரக்கு அல்லது…. வேறேதோ எரியும் மணம். எரியும் மணமல்ல, எரியக்கூடிய ஒன்றின் மணம்…
நுட்பமான கதையாடல்
சுந்தரம்