ஜெ
ஐந்து இடங்கள் தர்மனை புரிந்துகொள்ள முக்கியமானவை,
1. அவன் பாண்டு செத்துப்போனபோது நடந்துகொள்ளும் விதம்
2. அவன் கல்விகற்கும்போது ஆயுதங்களில் அக்கறை இல்லாமல் இருக்கும் இடங்கள்
3. துரியோதனன் வந்துகேட்கும்போது முடிவெடுக்காமலிருக்கும் சொதப்பும் இடம்
4 திருதராஷ்டிரனை கண்டிப்பாக பூசைசெய்யவேண்டும் என்று இடும்பவனத்தில் சொல்லும் இடம்
5 திருமணத்திற்குப்பிறகு பேசும் அந்த இடம்
ஐந்து இடங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் மாறிக்கொண்டே வருகிறான். முதலில் தீரமான பிள்ளை. அதன்பிறகு விதுரனின் சீடனான கோழை. அதன்பின் விதுரனுக்கு உள்ள அதே சூம்பிப்போன அமைச்சர்குணம்
இப்படி குறுகிப்போனவன் மூதாதையர் வழிபாடு பற்றி பேசும்போது விரிவடைகிறான். ஆனாலும் கோழைத்தனம் இருக்கிறது. திரைபதியை கல்யாணம் செய்தபின் அவன் முதலில் இருந்த அந்த தீரனின் இடத்துக்குப் போய்விடுகிறான்
இந்த ஐந்து புள்ளிகள் நடுவே என்ன நடக்கிறது என்பதை வாசகன் தான் ஊகித்துக்கொள்ளவேண்டும்.
இப்போது அவன் வைத்திருப்பது யமதருமனின் முடி
சண்முகம்