Monday, February 9, 2015

நீர் நெளிவு



ஜெ,

ஒரு வாசகர் அர்த்தநாரீஸ்வர ர் போல வென்முரசில் இருபாலினத்தவரின் சித்தரிப்பு வருவதை எழுதியிருந்ததாக சொன்னார். நான் எண்ணியதைச் சொல்லலாம் என்று எனக்கு தோன்றியது. அது தப்பாக்வும் இருக்கலாம். நீரலைகளை வாசித்தபோதே நெளிவும் குழைவும்தான் அந்த அத்தியாயம் முழுக்க இருந்துகொண்டிருப்பதா

நீரிலிருந்து அவர்களின் உடல்கள் கற்றுக்கொண்ட குழைதல்கள். அஃகியும் விரிந்தும் அணைத்தும் துழன்றும் அவை கொள்ளும் நடனங்கள். .ஒளியே அசைவாகும் விந்தை. அசைவே பொருளாகும் மாயம்.க நினைத்தேன்.http://www.jeyamohan.in/70282


அந்த வளைவும் நெளிவும்தான் அப்படியே இந்த இருபாலினத்தவரிடமும் வெளிப்படுகிறது என்று தோன்றியது. அவர்களின் அழகே அசைவுகள்தான்.அவரது உடலின் ஒவ்வொரு அசைவிலும் நடனமிருந்தது. அது இயல்பாகவே அவரில் கூடியது என்ற வரியில் அந்த விஷயமே காட்டப்பட்டிருந்தது என்று தோன்றியது

அத்தியாயத்தின் தொடக்கத்தில் அந்த அலையின் அசைவுகளைத்தான் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். அந்த நெளிவு முழுக்கவே நிக்ழந்துகொண்டிருந்தது

அகிலா