Tuesday, February 10, 2015

ஷாத்ரம்




ஜெ,

தருமனின் நீண்ட நாடகீயத்தன்னுரை [உங்கள் கலைச்சொல்தான்] ஒரு கதாபாத்திரத்தின் உட்கிடக்கையை கொண்டுவந்தது [வெமுந-6]

அது முக்கியமாக விதுரர் முன்னால் நடந்தது முக்கியமானது. ஏனென்றால் விதுரர்தான் இங்கே அவனுடைய ஆசான். இன்னொரு விதுரர் போல என்றுதான் அவனைப்பற்றிய எண்ணமாக இருந்தது. விதுரரிடம் ஒப்பிட்டுத்தான் அவன் எந்த அளவுக்கு மாறிவிட்டான் என்பதை உணரமுடிந்தது,

இவன் பேசுவதைப்பார்த்து விதுரன் இவன் வேறுமாதிரியான ஆள்.என்று மிரண்டுபோகிறார். இந்தத் தொடர்ச்சிதான் மிரளவைக்கிறது. விதுரனில் குறைவது என்ன என்று பீஷ்மர் சொல்கிறாரே அஅந்த அம்சம்தான் இப்போது தர்மனில் ஓங்கி நிற்கிறது-- ஷாத்ரம். ஷத்ரிய குணாதிசயம்

அவன் ஒவ்வொருவருக்கும் தண்டனைகுடுக்கும் இடத்திலும் மன்னிக்கும் இடத்திலும் இருக்கும் ‘இது என் முடிவு’ என்ற உறுதிதான் அந்தக்குணம்

கிருஷ்ணன் வந்தபோது முடிவெடுக்கத் தயங்கிக்கொண்டிருந்த தருமனுக்கும் இப்போதிருக்கும் தருமனுக்கும் இடையே எவ்வளவு வேறுபாடு

மனோகர்