ஜெ,
தருமன் திரௌபதியால் எப்படி மாறுகிறான் என்பது ஆச்சரியமானது. இதை நாம் எப்போதுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம். பெண் ஆணுக்கு பயங்கரமான தன்னம்பிக்கையை அளித்துவிடுவாள்.உலகிலே எனக்கு சமானமாக எவருமில்லை என்று நினைக்கவைத்துவிடுவாள். இவளையே ஜெயித்துவிட்டோம் இனி என்ன என்றுதோன்றும்.அதெல்லாம் தருமனின் நடத்தையிலேயே வந்துவிட்டது. சக்கரவர்த்தினியே கையில் வந்துவிட்டாள். வாக்தேவியையையே அவன் ஜெயித்துவிட்டான் இல்லையா?
அவன் மறுநாள் விதுரரிடம் பேசும்போது விதுரர் அசந்துபோயிருப்பார். பாண்டவர்களில் நான் தான் பெரிய பலசாலி என அவன் சொல்லும்போது தான் யார் தன் பலம் என்ன என்றெல்லாம் ஒரே இரவிலே தெரிந்துகொண்டவன் போல இருக்கிறான். குரலில் தெளிவு இருக்கிறது. முன்னால் எல்லாம் இதே விவேகம் கொண்டவனாக இருந்தாலும் இந்த கம்பீரம் குரலில் இருக்கவில்லை
திரௌபதி தருமனை தனக்கான சக்கரவர்த்தியாக ஆக்கிக்கொண்டாள் என்று நினைக்கிரேன். சக்கரவர்த்தினியின் கணவன் சக்கரவர்த்தியாகத்தானே இருக்கமுடியும் ”
சுவாமி