ஜெ சார்
வெண்முரசு நாவலில் ஆரம்பமும் முதலே வந்துகொண்டிருப்பவர்கள் பாடும் சூதர்களும் விறலிகளும். அவர்களை பலகதைகளைச் சொல்வதற்கான ஒரு டிவைஸ் ஆகத்தான் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைத்ததுண்டு. ஆனால் ஆரம்பம் முதலே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பிரம்மாண்டமாக ஆனபடியே வருகிறார்கள். அவர்களுடைய ஆகிருதியை பார்க்கும்போது அவர்கள்தான் முக்கியமான சக்திகளோ என்ற எண்ணம் வருகிறது
அதிலும் அந்த விறலிப்பெண்களுக்கு இருக்கும் ஆற்றலும் அவர்களை நீங்கள் ஒரு மிஸ்டிக் டோன் கொடுத்து எப்போதுமே சொல்லிக்கொண்டு போவதும் அபாரமான மன எழுச்சியை அளிக்கின்றன. விறலிகளை ஒரு பெரிய ஃபினாமினன் என்றுதான் சொல்லவேண்டும்
இந்தக்கதைகள் எல்லாம் ஒரு ஆயிரம் வருடம் இந்தச்சூதர்களால் பாடிப்பாடி நிலைநிறுத்தப்பட்டவை என்பதை நினைக்கையில் அவர்களுக்கெல்லாம் நாம் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது. அவர்கள்தான் இந்தியப்பண்ட்பாட்டையும் இந்துமதத்தையும் உருவாக்கி நிலைநிறுத்திய ஆதார சக்திகள் இல்லையா
அவர்களுக்கு கிரியேட்டிவ் அனார்க்கி என்ற வாழ்க்கைமுறைதான் உள்ளது. கட்டற்று இருக்கிறார்கள். அரசர்களால் பேணப்பட்டாலும் அவர்கள் அரசாங்கத்துடன் இல்லை. எதிர்நிலையாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் பாடும் பாடல்களை அவர்கள் எப்படி பாடுவார்கள் என்று நினைக்கநினைக்க ஆச்சரியம்
சம்பத்