Wednesday, February 18, 2015

சக்கரவர்த்தினியின் அகம்



அன்புள்ள ஜெ

அர்ஜுனனின் குணாதிசயத்தை அழகாகக் காட்டியது உங்கள் அத்தியாயங்கள். அவன் பெண்களை மதிப்பதில்லை. பெண்களிடம் அரசியலைப்பேசக்கூடாதென்ற எண்ணம் கொண்டிருக்கிரான். நேராகப்போய் துருபதனிடமே குந்தியின் கோரிக்கையைப்பேசுகிறான். மிகக்குறைவான தூரத்தையே அம்புகள் தேர்ந்தெடுக்கும் என்று அதைப்பற்றி தருமன் சொல்வதும் சரியகாவே இருக்கிறது. குந்தியின் மனநிலையையும் அவன் சரியாக எந்தவகையான மனச்சிக்கலும் இல்லாமல் புரிந்துகொள்கிறான்

அவனுக்கு குந்தியுடன் இருக்கும் சிக்கல் என்ன என்பதை முன்னரே நேரடியாகச் சொல்லியிருந்தாலும் அந்தகனின் சிறுகதை குறிப்பாகவும் அழகாகவும் அதைச் சொல்லிவிடுகிறது. அதிலிருந்து நிறையதூரம் சிந்தனைசெய்து போவதற்கு இடமிருப்பதாகத் தோன்றியது. ஆழமான பல சஞ்சலங்கள் மனசிலே வந்தன

அத்துடன் அவன் திரௌபதியை நடத்தும் விதமிருக்கிறதே. அவளை ஒரு வெறும் பெண்ணாக உடம்பாக மட்டுமே நடத்துகிறான். ஒரு காதலனாக இல்லாமல் கள்ளக்காதலன் போல அவளுடன் இருக்கிறான். இதை நாமே ப்ல சமயங்களில் பார்க்கலாம். பல வலிமையான பெண்களுக்கு அவர்களின் கள்ளக்காதலன் ஒரு அற்பனாகக்கூட இருப்பான். அவன் அவளை ஆட்டிவைப்பான். இந்திராகாந்தி பற்றி எம்.ஓ .மத்தாய் எழுதியதை இங்கே ஞாபகம் படுத்திக்கொண்டேன்

கே.கோபாலன்