ஜெ,
இன்றைக்கு வந்த [வெண்முகில்நகரம் 6] அத்தியாயத்தில் முக்கியமான இடமே அந்தச்சுருள்முடி பற்றிய இடம்தான். அது அவனை அர்ஜுனனாகக் காட்டுகிறது. போகத்தில் அவள் அதை கவனித்ததும் அவன் சுருள்கிறான். அவள் அர்ஜுனனை நினைத்துக்கொள்கிறாளோ என்று நினைக்கிறான். ஆனால் அவள் உடனே அதை உணர்ந்து அவன் மனதை ஆறுதல் செய்யும் விதமாக நன்றாகவே இல்லைநீங்கள் நீங்களகவே இருங்கள் என்கிறாள். அவன் நிறைவடைகிறான்
அவர்களுக்குள் நிகழ்ந்த இந்த சின்ன சுணக்கம் எல்லா ஆண்பெண் உறவிலும் உள்ளதுதான். ஆனால் இதிலே பல அடுக்குகள் உள்ளன. திரௌபதியின் மனமும் கூடவே தர்மபுட்்திி்திரனின் மனமும் வெளிப்படுகிறது. இவனுடைய சங்கடமும் அவள் அன்னை போல அணைத்துப்போவதும் தெரிகிறது
அஆகவேதான் மறுநாள் அவன் அவ்வளவு கம்பீரமாக இருக்கிறான். அவனுடைய அந்தத் தோரணை ஆச்சரியமளிக்கிறது
அருண்