Friday, November 6, 2015

துறவு 1

இதுவரை நம் எழுத்தாளரின் படைப்புகளில் எனக்கு படிக்க கிடைத்ததில் துறவு இந்த அளவேனும் ஒரு 'சிறப்பு' பெறுவது இந்த சில நாட்களில் என்று எனக்கு தோன்றுகிறது (ஆணால் நான் படிக்க வேண்டியவை இன்னும் ஏராளம் உள்ளது). துரவுக்கான மனம், பின் துறவில் எழும் சிக்கல்கள் இவை எல்லாம் இவ்வளவு அழகுடன் எடுத்தாள படுவது இந்த சில நாட்களில் என்று எண்ணுகின்றேன்.

ஈராறுகால்கொண்டுஎழும்புரவி, அப்பறம் ஒரு தாசி பெயர் சொல்லும் கிளிகள் கதை..  போன்ற இன்னும் சில படைப்புகளில், நம் வென்முரசில் காமம் விலகாமல் வீணே ஊழ்கத்தில் அமர்ந்து பின் வேழமாக - முதலை வந்து கலை கடித்தது, ஒரு அளவில் பீஷ்மரே கூட - துறவு கொஞ்சம் நகைப்புடனேயே கையாலபடுவதாக எண்ணி இருந்தேன்.

துறவுக்கு தான் எத்தனை சிக்கல். காக்கா கூட. எவ்வளவு அழகாண பெயர் அதுக்கு 'காக்கா'!

சில கேள்விகளுக்கு போகும்போது கிருஷ்ணன் (யோகீஸ்வரன், களியோகி) பின் வாங்குகிறான். சரியான நேரத்தில் கா கா வந்து விட்டது. மற்ற குருவிகள் நிறையில் சேர்க்காவிட்டாலும் படைப்பில் பறவைகள் குருவிகளுக்கான திரியில் இந்த காக்கைக்கு ஒரு இடம் உண்டு. (http://venmurasudiscussions.blogspot.in/2015/05/blog-post_88.html)

காக்கை என்ன செய்துவிடபோகிறது பாப்போம்.

அதிசயமாக கதை கண்ணனின் பார்வையில் பயணிக்கிறது, அர்ஜுனன் சாத்யகியாக கம்ம்மென்றுகூட பயணிப்பதை கூட நம்பி விட முடிகிறது!!

எனக்கு தெரிந்து இதுவரை கண்ணன் கதை விவரிக்கும் பெருமை இதுவரை காளிந்தி மட்டுமே அடைந்ததாக இருந்தது!!!

போக போக.. எப்படி பிரயாகையும் வெண்முகில் நகரமும் ஒரு புத்தகம் எனலாமோ அதுபோலவே இந்திரநீலமும் காண்டீபமும் ஒன்றே.. ஒன்றாக படித்தால் தான் பாராயண முழுமை பெரும் என்று பின் நாளில் ஏற்ப்படுத்தி விடுவோம்.
:P

நன்றி
வெ. ராகவ்