//அர்ஜுனன் அரிஷ்டநேமியின் அருகே சென்று அவருடைய புரவிக்கிணையாக தன் புரவியை செலுத்தினான். அவர் கையில் எதையோ வைத்து உருட்டிக்கொண்டிருப்பதை பார்த்தான். அந்தக் கல் அது என கண்டான்//.
மனித மனம் எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களை கடந்து வந்திருந்தாலும், அகத்தில் மீண்டும் மீண்டும் அசை போட்டு பார்க்க விரும்புவது, அல்லது விதிக்கப்பட்டது என்னோவோ அவன் அடைந்த ஒவ்வொரு வேதனைகளும் தான்.
ஒவ்வொரு மனிதனும் தன் பால்ய கால நினைவுகளாக ஏதேனும் ஒரு பொருளை,தன்னோடு நெடு நாள் துணை கொள்கிறான்.. அந்த பொருள் அவனை மீண்டும், மீண்டும் அந்த காலத்திற்கு அழைத்துசெல்கிறது.பின் வாலிப காலத்தில் அதை கைவிட்டு , அந்த வயதிற்கான ஆசைகளோடு சிறு சிறு பொருட்களை தன்னோடு தக்க வைத்துக்கொள்கிறான். பின்னாட்களில் அந்த பொருட்களை தொட்டுப்பார்த்து, நினைவை பின்தள்ளி அதில் ஒளிந்திருக்கும், வேதனையையும்,கசப்பையும், இயலாமையும்,அவமானங்களையும், நுகர்வதில், ஒரு அலாதி அனுபவத்தை அடைகிறான்.
இங்கே அரிஷ்டநேமி தன்னை தேரையாய் , அஞ்சி, வெறுத்து,குறுகி அமைந்திருந்த குகையில் அவர் வேதனை அனைத்தையும் திரட்டி ஒரு சிறு கல்லில் ஏற்றிவைத்து , அதை உள்ளத்துனைவன் என்கிறார்,
துறவு களைந்து நாடாள விளைந்தாலும் தன்னுடன் இருப்பதற்க்காக, அந்த கல்லை தன்னுடன் எடுத்து செல்கிறார். நாளை அவர் நாடாண்டாளும், எளிய மனிதனாய் தன் துயரைநினைவுகொள்ள , இந்த கல் ஒரு கருவியாய் துணைநிற்கும்..
ஆம் வேதனையை தான் இந்த மனம் எவ்வளவு விரும்பி, வழிந்து ஏற்றுக்கொள்கிறது.. ...
சௌந்தர்