அன்புள்ள ஜெ,
வெண்முரசின் நாயக நாயகியர் வரிசையில் இதோ சுபகை பேருருக் கொள்கிறாள் - காண்டீபத்தின் நாயகி.
இந்திரநீலத்திற்கு
ஒரே காட்சியை தேர்வுசெய்யவேண்டுமென்றால் துறைமுகத்தில் வழியனுப்ப வரும்
சாத்யகியின் தோளை திருஷ்டத்யும்னன் பற்றுவதையே சொல்வேன். அதுபோல்
காண்டீபத்தில் இளையபாண்டவன் சுபகையின் தடித்த கைகளைப் பற்றி
தேரிலேற்றிக்கொள்ளும் காட்சி அப்படியே உறைந்து கண்முன் நிற்கிறது.
சுபகை அம்பையை ஏன் நினைவுறுத்துகிறாள் என்பது வியப்பாக இருக்கிறது. அவளுக்கு அடுத்தபடியாக இவள்தான் முழுமையான பெண் என தோன்றுவதனாலா?
மேலும் ஒரு Haunting Character-ஐ படைத்தளித்தமைக்கு வாழ்த்துக்கள்! :)
ஸ்ரீனிவாசன்