Sunday, November 22, 2015

கண்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு

வெண்முரசை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். சுபத்திரை அர்ஜுனன் உரையாடல் வழியாக வரும் அந்த காமம் சம்பந்தமான நுணுக்கங்கள் அபாரமாக இருந்தன

இரண்டு விஷயங்களை குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று, முத்தமிட்ட பின்னர் திரும்பி இழுத்து அவன் முத்தமிட்டதைப்பற்றி சுபத்திரை சொல்லும் இடம். அது அழகான உண்மை

அதேபோல ஆண்களின் அலையும் கண்களைப்பற்றிச் சொல்லும் இடம். அலையாத கண் உடையவன் பெண்ணை ரொம்பவே பார்த்தவன் என்பது. அதெல்லாம் பேசித்தெரியாமலே பெண்ணுக்குத்தெரியும் என்பது.

பெண்ணைப்பார்க்காதவர்களின் பார்வை உடம்பிலே ஊர்வது போல இருக்கும். நிறையவே பார்த்தவர்களின் கண்களில் ஒரு  அலக்‌ஷியம் இருக்கும். அது எரிச்சலை உண்டுபண்ணும்.

எஸ்