அர்ஜுனன் சுபத்திரையை கவர்ந்து சென்றது தெரியுமென்பதால் நேற்று வரை
அவனும் துவாரகையை விட்டு வெளியேறியவன் என்று தான் நினைத்தேன்.அனால் அவனும் நகருடன்
பினைக்கபட்டுள்ளான்.அதில் இருந்து மீண்டவர் அரிஷ்டநேமி மட்டுமே.அதுவே இந்நாவலின்
பெருந்திறப்பென உள்ளது.ஓர் கணம் அவ்வரியுடனேயே நாவல் முடிந்ததென நினைத்தேன்.இங்கிருந்து
மீண்டும் எழுகிறது காண்டீவம்.மேலும் தாங்கள் அடைய முடியாததைத் தன் மகவுக்கு அளிக்க
முனையும் இயல்பான பெற்றோராய் பெருவீரர்கள். பப்ருவாகனனிடமும் அரவானிடமும் காட்டாத
அன்பை பிறக்காத குழந்தை மேல் பொழிகிறான் அர்ஜுனன், அது சுபத்திரயிடம் அவன் அடைந்த
சரணாகதியின் விளைவோ???
அன்புடன்
செந்தில்நாதன்
அன்புள்ள செந்தில்நாதன்
முக்தி தனக்கில்லையென்றாலும் பிள்ளைக்கு என விழைவது தந்தையின் இயல்பு
ஆனால் ஊழ் என ஒன்று உள்ளது அல்லவா?
ஜெ