அன்புள்ள ஜெ
வெண்முரசு அர்ஜுனனின் வீரச்செயல்களில் தொடங்கி நேமியின் அகிம்சையில் வந்து நிற்கிறது. வழிதவறிச்செல்கிறதா என்ற எண்ணம் ஆரம்பம் முதல் இருந்தது. நீங்கல் கதையை அல்ல, உங்கலுக்குள் எழும் கேள்விகளைத்தான் தேடிச்செல்கிறீர்கள் என்று யோசித்தபோது அதன் வடிவம் அப்படித்தான் இயல்பாக அமைந்து வருகிறது என்று நினைத்துக்கொண்டேன்.
அர்ஜுனனின் பயணத்தை நீங்கள் யுலிஸஸின் சாகசப்பயணம் போல சித்திரித்தீர்கள். அதாவது உண்மையான வீரனின் பயணம் என்பது அகப்பயணம்தான் என்று காட்டினீர்கள். உலூபியைச்சந்திக்கச்செல்லக்கூடிய நாகர் உலகப்பயணம்கூட சாகசப்பயணம்தான். ஆகவே அந்தப்பயணத்தின் உச்சம் எது என்ற இந்திய மனசில் கேல்வியை கேட்டு பதில் சொல்கிறீர்கள்
அது அகிம்சைதான். அகத்தை ஜெயிப்பதுதான் வீரத்தின் உச்சம். அர்ஜுனன் போன நாகருலகம் ஒரு தொடக்கம். அதன் உச்சிநிலை அருகநிலைதான் . முழுமையான ஒரு வடிவமாக இப்போது காண்டிபம் தெரிகிறது
சாரங்கன்