அரிஷ்டநேமியையும் சுப்ரதிபமும் வேறு வேறாக பார்க்க வேண்டுமா?
நேமி-க்கு கொடுக்க படும் விவரணைகள் அனைத்தும் யானையை சொல்வதாக உள்ளது, உதாரணம் அவர் கைகள் தந்தங்களை ஒப்பு கூர படுகிறது
அவரே ஒரு யானையாக வலம் வருகிறார்
சுப்ரதீபம் துவாரகை நுழைந்தது முதல் அது அதன் சொந்த நகரம்.
அதன் விவரணைகள் எல்லாம் மனிதனுக்கான விவரணைகள் போலவே உள்ளன.
சொல்ல போனால் அரிஷ்டநேமியை விவரிக்கும் சில விஷயங்கள், முக்கியமாக உயரம், சுப்ரதீபத்துக்கு கொடுக்க படுகிறது.
நேமிநாதர் பற்றி தெரிந்து விட்டதால் முக்கியமாக படாமல் இருக்கலாம், ஆணால் புதிதாக படித்தால், வெண்மையான யானைகள் பிள்ளைகள் பெறாது என்பதே அரிஷ்டநேமியை குறிப்பதாக ( முழுமையை தொட்ட பின்னர் ) எனக்கு தோன்றுகிறது.
பொதுவாக தீர்த்தங்கரர்களை குறிக்கும் சிலைகளில் உருவத்தை மட்டும் வைத்து அடையாளம் காண்பது கடினம். மாறாக அவர்களுக்கான ஒரு சின்னம் இருக்கும், பெரும்பாலும் ஒரு ரிஷபம், பாம்பு, சிங்கம் இது போல. சுப்ரதீபம் வந்ததும் மறுபடியும் சென்று படித்து பார்தேன். நேமினாதரின் சின்னம் சங்கு. நம் எழுத்தாளரும் அதை இங்கு ஒரு முறைக்கு மேலேயே தெளிவு படுத்தி உள்ளார். அப்படியானால் நம் எழுத்தாளர் எதன் பொருட்டு இங்கு சுப்ரதீபத்தை வரவழைத்தார்.
எனக்கு இப்படி தோன்றுகையில் இருவரும் ஒருவரே தான் என்று
இது ஒரு புறம் இருக்க கூடவே ரொம்ப யோசிக்கும் மூளைக்கு நிறைய கேள்விகள்
* அர்ஜுனன் பயபடுகிறான்(!!!), கிருஷ்ணன் எங்கும் நிறைந்து இல்லாமல் முழு தனிகோலத்தில் அரசு 'வேலைகள்' ஒரு ஓரமாக பார்கிறான்.
* துவாரகை ஆரம்பித்ததில் இருந்து அங்கேயே பல வேலைகளுடன் கிடக்கும் அர்ஜுனன் ஏதும் மந்திரம் போட்டானா, ஒருவர் கூட, அக்ரூரர் கூட அவனை அடையாளம் காணவில்லை... அல்லது இது வேறு ஒருவர் கதை என்பதால் தாடி வளைர்த்து கன்னத்தில் மச்சம் வைத்த அர்ஜுனனை அவ்வளவு எளிதாக அடையாளம் காண முடியவில்லையோ ??
* சுஜயனும் சுபகையும் மாலினியும் இவ்வளவு நேரமா உம் கொட்டி கொண்டே கதை கேட்பார்கள்?
யானை வந்ததும் ஒரு ஏழு யானையை வாளாலேயே போட்டு தள்ள வேண்டாமா ?
குருதி சிந்த வேண்டாமா?
எதையுமே நம்ப முடியவில்லை. அதற்குள் ஒருவர் காண்டீபம் முடியபோகிறது என்கிறார் விவாத தளத்தில், அவருக்கு என்ன அவசரம்?
எனக்கு அப்படி எண்ணமில்லை. இங்கே வந்து அல்லி ராஜ்ஜியத்தை(!) பார்த்து, திருமணம் எல்லாம் வேண்டாமா??
நன்றி
நன்றி
வெ. ராகவ்