Saturday, November 14, 2015

அகிம்சையும் அர்ஜுனனும்

அன்புள்ள ஜெ

பகவத் கீதையில் அகிம்சை என்னும் விழுமியமே உயர்ந்தது என ஒரு வரி வருகிறது. ஜைன மதத்தின் கருத்துக்கள் சூழலில் வலுவாக இருந்ததுதான் காரனம் என்று நினைத்தேன். அதையே நீங்களும் நினைத்திருப்பதை இப்போது வாசித்துக்கொண்டிருக்கிறேன். அர்ஜுனன் போர்க்களத்திலே அடையும் மகத்தான மனத்தடுமாற்றம் எப்படி எந்தெந்த விஷயங்களில் இருந்து வந்தது என்று இப்போதைய அத்தியாயங்கள் சொல்கின்றன. அவன் வன்முறையிலிருந்து கருணை நோக்கிச் செல்கிறான். கருணைகொண்ட போர்வீரனாகவே அவன் கடைசியில் குருஷேத்ரத்திலும் இருக்கிறான்.

இந்தநாவல் அர்ஜுனனின் மனைவிகளைத்தான் சொல்கிறது. ஆனால் அவன் அடைந்த ஞானப்பயணங்கள்தான் திரண்டு வருகின்றன. அதில் உச்சமென்பது அர்ஜுனன் அகிம்சையைக் கண்டடைந்ததுதான். அதை நேமிநாதர் போன்ற அற்புதமான கதையை அதில் இணைப்பதன் வழியாகச் சொல்லியிருக்கிறீர்கள். சிந்திக்க மிகவும் விரிகிறது

சண்முகம்