Monday, November 16, 2015

நிகர்

  // அர்ஜுனன் புன்னகையுடன் “தனக்கு நிகரென இப்புவியில் அனைவரையும் அவர் எண்ணுவதே அவரை தனிமைப்படுத்துகிறது என்று நினைக்கிறேன்” என்றான் // 
          ஆழ்ந்து சிந்திக்க வைக்கும்  வரிகள். நான்  இதை நீண்ட காலமாக துருவித்  துருவி என்னை கேட்டுக் கொண்தே இருக்கிறேன்..நான் உள்பட  அநேகமாக ஒவ்வொரு மனிதனும் பிறிதொரு மனிதனை தனக்கு நிகராக நினைக்கிறானா என்பது மிக முக்கியமான கேள்வி. ஒன்று தனக்கு கீழே வைக்கிறான். அல்லது தனக்கு மேலே வைக்கிறான்.நிகராக வைக்க முடியுமா? யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.

சுரேஷ் கோவை.


*

தன்னை எந்த ஒரு மனிதனையும் நிகராக கருதுவது உச்ச நிலை அல்லவா?  அந்த நபரை எப்படி நாம் சாதாரண மனிதர்களிடையே காண முடியும்? எந்த ஒரு மனிதனையும் அவன் அகங்காரம் பிறிதொரு நபரை தன்னை விட உயர்வாக வைக்க இடம் கொடுக்காது. சில சமயம் சில திறமைகளில் மட்டும்  மற்றவன் என்னைவிட திறமைசாலி என நினைக்கலாம். அவன் ஒருவேளை வெளியில் அப்படி ஒருவரை தன்னைவிட அனைத்திலும் உயர்வாக சொல்லிக்கொள்ளலாம். ஆனால் அவன் உள்ளத்தின் ஆழத்தில் அந்த ஒரு நபரின் மேல் ஒரு எதிர்ப்பு உணர்வும் இருக்கும். அல்லது எவ்வித தர்க்கத்திற்கும் உட்படாத  ஒரு அதி நாயக வழிபாடாக து இருக்கும், அதை நாம் கணக்கில் கொள்ளமுடியுமா?  

தண்டபாணி துரைவேல்