Tuesday, November 17, 2015

நிர்மலம்

அன்புள்ள ஜெ

நிர்மலம் என்னும் சொல்லைப்பற்றி பேசிக்கொண்டிருந்தேன். மலமறுத்தல் என்னும் வார்த்தையின் வடிவம் அது. மும்மலங்களையும் அறுத்து தூய்மையானவள் நிர்மலா. தேவியின் வடிவம். ஒரு பெயர்

அரிஷ்டநேமி நிர்மலனாவதை காட்டும் அத்தியாயத்தில் அவரது ஆடைகள் அணிகள் எல்லாமே மலங்களாக அழுக்குகளாக தெரியும் இடத்தில் வாசிப்பை நிறுத்திவிட்டு அய்யோ என்று சொல்லிவிட்டேன்

சமணர்களுக்கு உடலேகூட அழுக்குகள் தான் .அதை கடைசியாக உதறும்போதே முழுத்தூய்மை.அதைத்தான் அவர்கள் நிர்மலம் என்கிறார்கள்

சிவராஜ்