அன்புள்ள ஜெ 
நலமா? வெண் முரசை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
பாகவத
 கதைகளில் - சியமந்தக மணி சார்ந்த கதைகள் - மிக ஆழ்ந்த, நுண்ணிய கதைகளாக 
கேட்டது உண்டு. இந்திர நீலம் அதனை உள்ளடக்கி ஒரு விவாத தளத்தை உருவாக்கி 
உள்ளது. எருதுகள் பற்றிய சாஹசம்  அக்ரூரர் வழியாக படித்தது நன்றாக 
இருந்தது.
காண்டீபம் வேறு தளத்தில் இயங்குவது போல
 - அரவான் பிறப்பு அற்புதமாக இருந்தது. சமூக பொறை மிகுந்த ஆச்சரியமான 
அளவில். தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருப்பது போல. தெரிந்த கதை - 
தெரியாத ஆழங்கள் - சித்திராங்கதை கூட.  அர்ஜுனன் பெண்ணாக இருந்தது மிக 
அழகு.
அரிஷ்டநேமியின் வரவு - தளத்தை வேறாக மாற்றி
 விட்டது. அருகர்கள் மற்றும் அவர்கள் நெறி மீது பேராவலும் ஆச்சரியமும் 
எனக்கு உண்டு. அவர்களின் சிந்தனை தளம் பற்றியும் - இயக்கம் பற்றியும் - 
அஹிம்சை மற்றும் ஆழமான வாளேந்தாத வீரமும் - சொல்லில் விவரிக்க முடியாத 
மரியாதையும் அன்பும் மேலோங்குகிறது. நம் மரபின் மீது ஒரு பெருமையும் 
ஓங்குகிறது. 
பலமுறை சொல்லி இருக்கிறேன். எனினும் அருமையான எழுத்திற்கு நன்றி.
அன்புடன் 
முரளி 

