Tuesday, November 17, 2015

வெள்ளையானை

பௌத்ததத்தில்  வெண்ணிற யானை ஒரு முக்கியமான குறியீடு. போதிசத்வ வடிவம் என்று ஒரு மரபு உள்ளது. தாய்லாந்தில் வெள்ளையானையை புத்தராகவே வணங்கும் மரபும் உள்ளது என்று நினைக்கிறேன். வெண் முரசில் மகாவீரருக்கு முன்னால்  உள்ள அருக மரபு விவரிக்கப்படுவது போல கௌதம புத்தருக்கு முன்னால்  உள்ள போதிசத்வ/புத்த மரபு குறித்து ஏதும் இல்லாத நிலையில் (அல்லது வண்ணக்கடலில் எங்காவது வருகிறதா) சுப்ரதீபம் எனும் இந்த வெண்ணிற  யானையை ஒரு போதி சத்வர் என்ற கோணத்தில் பார்க்கலாமா?

சுரேஷ்

அன்புள்ள சுரேஷ்

யானை என்பது ஆற்றல். கரிய யானை தாமஸ சக்தி. வெள்ளையானை சத்வ சக்தி. இந்த உருவகம் இந்து சமண பௌத்த மதங்களுக்குப் பொதுவானது. [சக்கரம்,தாமரை, சங்கு, காளை, யானை ஆகியவை இந்தியாவுக்குப் பொதுவான உருவகங்கள்]

வெள்ளையானை ஞானத்தின் உருவகம். போதிசத்வர்கள் யானை ஊர்பவர்கள், யானைகளாக அவர்களை உருவகிப்பதுமுண்டு. இந்திரன் வெள்ளையானை மேல் ஊர்பவன். சாஸ்தா யானைமேல் அமர்ந்தவர். 

ஜெ