இனிய ஜெயம்,
உள்ளே தீப்பிடித்தது போல செவ்வொளி பரவிய ,மேகங்கள் , ஒளி விளக்கை மூடிய பட்டுத்துணி போல ஒளி பொதிந்த மேகங்கள். உதயஒளி கூடிக் கூடி வருவதை மேகங்கள் ஏற்று ஒளிரும் கோலம்.
ஏனோ மனம் மஞ்சுநாதர் மஞ்சுநாதர் என்றே புலம்பியது. இடி ஓசை கேட்ட வெண்ணன், தனது பயணத்தின் இலக்கை தீர்மானித்து விட்டான்.மஞ்சுதிகழ் விரிவானம்.
ஆம் வெண்ணன் நேமியை அழைத்து செல்ல வரவில்லை. அவர்கள் பயணத்தில் அவர்கள் இருவரும் ஒன்றினைந்திருக்கிரார்கள்,
அவர்கள் என்ன உரையாடினார்கள்?செவி கடந்து அகம் அறியும் பொன்னொலி . பொன் மொழி, பொன் உரையாடல்,
வெண்ணன் கை தவறிய வெண்கலக் கிண்ணமாக இன்றைய தினத்தில் எனது மனம்.
கடலூர் சீனு