Monday, November 23, 2015

வன்முறையும் அகிம்சையும்

ஜெ

வெண்முரசின் இந்த நாவல் அழகாக முடிந்துகொண்டிருக்கிறது. உச்சகட்ட வன்முறையில் ஆரம்பிக்கிறது சுஜயன் சின்னக்குழந்தையாக இருந்தாலும் அந்த வன்முறை குழந்தைத்தனம் இல்லை. ஒரு மரத்தின் ஸ்பெஷல் வாசனை அந்த மரத்தின் விதையில்தான் இருக்கும் என்று சொல்வார்கள். அதேபோல அன்றைய  சத்ரியர்களின் வன்முறை முழுக்க சின்னப்பிள்ளைகளின் மனதிலேதான் இருக்கும்.

அந்த வன்முறையிலே தொடங்கிய நாவல் மெல்லமெல்ல வளர்ந்து அகிம்சைத்தரிசனத்தில் வந்து நிற்கிறது. ஆச்சரியகரமான விஷயம்தான் இது. அறியாமலேயே அதில் சென்று சேர்ந்துவிட்டது. அந்த மாற்றம் எப்படி நடந்தது என்றுதான் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

நேமிநாதரின் கதையை இந்த க்கதைக்குள் இணைத்தது ஒரு அழகான முடிச்சு

சண்முகம்