காண்டீபம் 69-ல் சொல்வணிகம் பற்றி வருகிறது. சொல்வணிகம் என்றால் என்ன?
///"இந்திரப்பிரஸ்தத்திற்கு மட்டுமே உரிய தனித்தன்மையென்பது பொன்வணிகமும் பொருள் சொற்குறிப்பு வணிகமும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாது என்று அறிந்தது. அங்காடியின் நடுவே அதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றியுள்ள அத்தனை வணிகநிலைகளில் இருந்தும் சில காலடிகளில் நடந்து பொன் வணிகனையோ சொல்வணிகனையோ அணுகிவிட முடியும். பொருளை பொன்னாகவும் பொன்னை சொல்லாகவும் மாற்றிக்கொள்ள முடியும். இங்கு பத்தாயிரம் பொன் மதிப்புள்ள பொருளை விற்று செல்வத்தை பத்தே நாட்களில் தாம்ரலிப்தியில் சேர்த்துவிடமுடியும்” என்றார் கொழுத்த வணிகர். ///
ராஜா
இளநாகன் அறிவது, ஒரு இடத்தில் குவித்து வைத்திருக்கும் நெல்லை ஒரு வணிகர் வாங்கி மற்றொரு வணிகருக்கு விற்கிறார் அல்லது விற்பதாக ஒப்புக் கொண்டு பணமோ சொல்லோ பெறுகிறார். பின் நெல்லை வாங்கிய வணிகன் அதனை மற்றவருக்கு விற்றபின்/ விற்பதாக ஒப்புக்கொண்டு பொன் பெற்று தான் வாங்கிய வணிகனுக்கு கொடுக்கிறார்.
இங்கு நிகழ்வது பொன் பெறாது சொல்லுக்கு மட்டுமே கட்டுப்பட்டு பொருள் விற்றல் சொல் வணிகம் போல் உள்ளது.
இந்திரப்ரஸ்தத்திலும் அதுவே நிகழுமா அல்லது இன்னும் அட்வான்ஸாக சொல்லப்பட்டுள்ளதா ?
மீனாம்பிகை