Saturday, November 21, 2015

தேரோட்டியின் தங்கை

அன்புள்ள ஜெ

வெண்முரசில் சுபத்திரை தேரோட்டும் இடங்கள் அழகானவை. ஓர் ஆண்மகனுக்கு பெண் தேரோட்டியாக அமைவது குறியீட்டு முக்கியம் உடையது. அவளுக்குப்பதில்தான் குருஷேத்ரத்தில் கிருஷ்ணன் தேரோட்டியாக வருகிறான் இல்லையா?

அந்த மாற்றம் ஒரு இல்லறத்து வீரனாக இருந்தவன் யோகியாக ஆவதைக் காட்டுகிறது என்று எனக்குப்பட்டது. அவள் தேரை ஓட்டுவதில் இருக்கும் அந்த மிடுக்கும் வேகமும் அற்புதமாக வந்துள்ளது. ஒரு ஹாலிவுட் சேஸிங் காட்சிபோல உள்ளது

இத்தனை நுட்பமான சேஸிங்கில்கூட துவராகையின் நகர அமைப்பு நம் கண்ணில் குழப்பமில்லாமல் விரிவதை ஆச்சரியமாகவே பார்க்கிறேன். நாமே உள்ளே போய் வந்ததுபோல உள்ளது

சாரங்கன்