ஜெ
காண்டீபம் அனைத்து
சிறகுகளையும் இழுத்து ஒடுக்கிக்கொண்டு உக்காரும் பறவைபோல இருக்கிறது. ஒவ்வொன்றாக அதற்குரிய
வகையில் முடிவதைக் காண்கிரேன். சுஜயன் உச்சகட்ட வன்முறையில் இருந்த குழந்தை. அவன் அடங்கி
அமைதியாகிறான். அவன் இடத்தில் அதைவிட வன்முறைகொண்ட வேறு பிள்ளைகள் வந்துசேர்கிறார்கள்.
சுஜயன் சுபகைக்கும் அர்ஜுனனுக்கும் இடையே இருந்த உறவை ஊகித்து அறிந்துதான் வன்முறை
கொள்கிறான். இப்போது அவன் அதைக் கடந்து அன்புள்ளவனாக ஆகிவிட்டான். சுபகையை அர்ஜுனன்
அறிந்துவிட்டான். திரௌபதி தனிக்காட்டு சிங்கமாக இருந்தாள். போட்டிக்கு சுபத்திரை வந்து
அதே அரண்மனையில் இருக்கிறாள். நாவல் தொடங்கிய எல்லாமே முடிந்துவருவதைக்காணும்போது ஒரு
சிம்பனி மாதிரி அது அமைதியாவதைக் காண்பதுபோலிருக்கிறது
ஜெயராமன்