Wednesday, November 18, 2015

குருதியின் விலை

நேமி ஏன் திரும்பிவந்தார் என்று நான் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவர் முழுசாகத் திரும்பி வரவில்லை. கையில் அந்தத்துறவுவாழ்க்கையை கொஞ்சம்போல விதையாக எடுத்துக்கொண்டுதான் வந்தார். ஆகவே அவர் வந்தது திரும்பிப்போவதற்காகத்தான்.

ஆனால் ஏன் திரும்பினார். ஏன் அவருக்கு தன்னால் மணவாழ்க்கையிலே திளைக்கமுடியாது என்று தோன்றவில்லை? ஏனென்றால் அவர் சிந்தித்து துறவை அடைந்தவர். அப்படித்துறவு கொள்ளமுடியாது. அறுத்துக்கொண்டு செல்லவேண்டும். அப்படி ஒரு கணம் தேவை

அதைத்தான் அங்கே ஆட்டுப்பட்டியில் அவர் அடைகிறார். அந்த நிகழ்ச்சிகள் ஒரு பிரசவம்போல் இருக்கின்றன. குருதியில் இருந்து அவர் எழுந்து வருகிறார்

அந்த களம் லௌகீக வாழ்க்கை. அங்கே சிந்தும் குருதியில் இருந்து தன் குருதியை வீழ்த்தி அவர் தப்பித்துவிடுகிறார்

சண்முகம்