Thursday, November 19, 2015

குருஷேத்ரம்

ஜெ,

வெண்முரசின் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அதில் காண்டீபம் தனி. நாவல் எழுதப்படும்போதே நீங்கள் புதியவற்றை கண்டுபிடித்துக்கொண்டே செல்வதை ஆசரியமாக பார்ப்பவ்ன் நான். காண்டீபம் என்று தலைப்பு வைக்கும்போது அர்ஜுனனின் வெற்றிப்பிரபாவத்தைத்தான் சொல்லப்போகிறீர்கள் என நினைத்தேன். நீங்களேகூட அப்படி நினைத்திருக்கலாம். ஆனால் மெல்லமெல்ல நாவல் வன்முறையில்லாத அகிம்சையை நோக்கிச் சென்றுவிட்டது. ஆச்சரியமான விஷயம்தான்.

நேமி பார்க்கும் அந்த ஆட்டுப்பட்டியின் ரத்தம் குருஷேத்ரத்தின் ஒரு பிரிலூட் போல. அங்கே நேமி அடைவது கீதாமுகூர்த்ததில் அர்ஜுனன் அடைந்தது. ஆனால் அவனுக்கு நேர்தலைகிழ் உபதேசம் அளிக்கப்பட்டது. ஆனால் அதில் கிருஷ்ணன் அகிம்சையே தர்மங்களில் உயர்ந்தது என்றும் சொல்கிறான். படிப்படியாக நீங்கள் உருவாக்கும் பெரிய சித்திரம் ஆச்சரியப்படச்செய்கிறது

சுவாமி