பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
 
இந்தக் 
 கேள்வி சற்று அதிகபிரசங்கித்தனமாக இருந்தால் மன்னிக்கவும். அருகநெறியின் 
பால் உள்ள  தங்கள் ஈர்ப்பு வாசகர்களான நாங்கள் ஏற்கனவே 
அறிந்ததே.இருந்தபோதிலும் காண்டீபத்தில் இப்போது வரும் அருகநெறி 
சம்பந்தப்பட்ட புனைவுகள் சற்று வலிந்து சேர்க்கபட்டது போல் தோன்றுகிறதே 
(ஆனால் இவை எல்லாம் தங்கள் 'கைவண்ணத்தில்' நன்றாக மிளிர்கின்றன என்பதில் 
சந்தேகேமே இல்லை) இவற்றிற்கும் வியாச மகாபாரதத்திற்கும் ஏதேனும் வகையில் 
தொடர்பு உண்டா? சற்று விளக்கவும்.